ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழக வீரருக்கு ரூ.3 கோடி பரிசு தொகை.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புடோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் தமிழக வீரருக்கு மாநில அரசு சார்பில் 3 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் 18 ஆயிரம் விளையாட்டு வீரர்களில் 10 ஆயிரம் பேர் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்நிலையில், மீதமுள்ள வீரர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டது. விளையாட்டு மேம்பாட்டு துறை, சுகாதாரத்துறை, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் ஆகியவை இணைந்து, சிறப்பு தடுப்பூசி முகாமை ஏற்பாடு செய்தது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த பின்னர், முதற்கட்டமாக விளையாட்டு வீரர்கள் 5 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

மேலும், ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு அரசின் ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரர்கள் 6 பேருக்கு தலா 5 லட்ச ரூபாயை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா. 

 
சுப்பிரமணியன், சேகர்பாபு, மெய்யநாதன், எம்.எல்.ஏ.க்கள் உதயநிதி ஸ்டாலின், பரந்தாமன் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தங்க பதக்கம் வெல்லும் தமிழக வீரருக்கு மாநில அரசு சார்பில் 3 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். வெள்ளி பதக்கம் வென்றால் 2 கோடி ரூபாயும், வெண்கலம் அறுவடை செய்தால் 1 கோடி ரூபாயும் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments