கோபாலப்பட்டிணத்தில் கொரனோ தடுப்பூசி செலுத்தியவர்கள் யார் ? செலுத்தாதவர்கள் யார் ? வீடு, வீடாக கணக்கெடுப்பு பணி தீவிரம்!புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட  மீமிசல்  கோபாலப்பட்டிணத்தில் கொரனோ தடுப்பூசி செலுத்தியவர்கள் யார் ? செலுத்தாதவர்கள்  யார்? என்று வீடு, வீடாக  கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோபாலப்பட்டிணத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக கோபாலப்பட்டிணத்தில் ஜுன் 1 செவ்வாய் கிழமை முதல்  பொதுமக்கள் வீடுகளுக்குச் சென்று  தடுப்பூசி அனைவரும் போட்டு உள்ளாா்களா அப்படி என்றால் போட்டவா்கள் எத்தனை போ், தடுப்பூசி போடாதவா்கள் எத்தனை போ் என்ற விவரங்களை சேகரித்து வருகின்றனா். மேலும் வீட்டில் 45 வயதுக்கு மேல் எத்தனை போ், 18 வயதுக்குள் எத்தனை போ் உள்ளனா் என்பது குறித்து கணக்கெடுத்து வருகின்றனா்.

இது குறித்து கணக்கெடுப்புக்க வந்த சுகாதார அதிகாரிகள் கூறியது: 

கோபாலப்பட்டிணத்தில் கடந்த ஜுன் 1  ஆம் தேதி தொடங்கிய பணி இன்னும் ஓரிரு நாள்களில் நிறைவடைந்து விடும். சுகாதார அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments