கோபாலப்பட்டிணத்தில் குளு குளு கிளைமேட்!!கேரளாவில் ஜூன் 3 முதல் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியது.   வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்திலும் இந்த பருவத்தில் புதுக்கோட்டை உட்பட சில மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட  மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணத்தில் ஜூன் 4 வெள்ளிக்கிழமை  மாலையில் வானில் கருமேகங்கள் திரண்டு இருந்தன. நேற்று ஜூன்  5 காலை முதல்   தூரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை ஓரே சீராக பரவலாக பெய்தது. மேலும் காற்றும்  வீசியது. இந்த திடீர் மழையால் குளிர்ந்த காற்றால்  மழை விட்டு விட்டு  பெய்தது. அதன்பின் மழை தூறியபடி இருந்தது. மதியம் முதல் அவ்வோபோது வெயில் லேசாக அடித்தது. இருந்தாலும் குளிராக காணப்பட்டது.

கோபாலப்பட்டிணத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. 

இந்த நிலையில் தென்மேற்கு பருவமழையால்  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோடை வெயிலுக்கு பிறகு கோபாலப்பட்டிணத்தை வாட்டி வதைத்த கடும் வெயிலுக்கு மத்தியில், இந்த தொடர் குளு குளு  வானிலை கோபாலப்பட்டிணம் மக்களை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது. 

கோபாலப்பட்டிணத்தில் வெப்பக் காற்றில் இருந்து மீண்டு ஊட்டி போல குளு குளுவென காட்சியளித்து.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments