சமூக சீர்திருத்தவாதி முத்துலட்சுமி ரெட்டி பிறந்த ஊரில் ஆட்சியராகப் பணிபுரிவதில் பெருமை: புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு பெருமிதம்!






புதுக்கோட்டை ஆட்சியராகப் பொறுப்பேற்றுக்கொண்ட கவிதா ராமு. புதுக்கோட்டையின் 41-வது ஆட்சியராக கவிதா ராமு இன்று பொறுப்பேற்றார்.

புதுக்கோட்டை ஆட்சியராகப் பணிபுரிந்த பி.உமா மகேஸ்வரி, டிஎன்பிஎஸ்சி செயலாளராக மாற்றப்பட்டதையடுத்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநராகப் பணிபுரிந்த கவிதா ராமு புதுக்கோட்டை ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் ஆட்சியராக இன்று (ஜூன் 17) பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

"பெண்ணுரிமைப் போராளி, சமூக சீர்திருத்தவாதி முத்துலட்சுமி ரெட்டி பிறந்த ஊரில் ஆட்சியராகப் பணிபுரிவதைப் பெருமையாகக் கருதுகிறேன்.

தொல்லியல் துறையில் பணியாற்றியபோது மாநிலத்தில் 2-வது பெரிய அருங்காட்சியமாக விளங்கும் புதுக்கோட்டை அருங்காட்சியம் கூடுதல் நிதி ஒதுக்கி மேம்படுத்தப்பட்டது. மேலும், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த புதுக்கோட்டையைச் சுற்றுலா வளர்ச்சி குறித்து கவனம் செலுத்துவேன்.

தமிழக முதல்வர் தெரிவித்துள்ளதைப் போன்று அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், கோரிக்கைகள் குறித்து நடவடிக்கைகளும் எடுக்க உரிய கவனம் செலுத்தப்படும். பொதுமக்கள் எனது செல்போனுக்கு 94441 81000 தொடர்புகொள்ளலாம்" என்றார்.
.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments