புதுக்கோட்டை மாவட்ட பொதுமக்கள் தங்கள் குறைகளை வாட்ஸ்-அப் மூலம் தெரிவிக்கலாம்: போலீஸ் சூப்பிரண்டு தகவல்!



புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் முழுமையாக கண்காணிக்கப்படும். குற்றங்களை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா, மணல் கடத்தல் போன்றவற்றை தடுக்க தனி கவனம் செலுத்தப்படும். சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்கவும், பொதுமக்கள் அச்சமின்றி இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகளில் தனி கவனம் செலுத்தி தீர்க்கப்படும். 

தற்போது உள்ள கொரோனா சூழலில் போலீசார் மனஅழுத்தத்தை குறைத்து அமைதியான சூழலில் பணியாற்ற யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும். மேலும் பொதுமக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்க 72939 11100 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments