புதுக்கோட்டை மாவட்டத்தில் முக்கிய பதவிகளில் பெண் ஆளுமைகள்


புதுக்கோட்டை மாவட்டத்தில் முக்கிய பதவிகளில் பெண் ஆளுமைகள் 

புதுக்கோட்டை ஆட்சியராக உள்ள உமா மகேஸ்வரி மாற்றப்பட்டு, மற்றொரு பெண் ஆட்சியர் கவிதா ராமு நியமிக்கப்பட்டுஉள்ளார். இவர், இன்று பொறுப்பேற்கிறார். இதேபோல, எஸ்பியாக நியமிக்கப்பட்ட நிஷா பார்த்திபன் நேற்று பொறுப்பேற்றார். கோட்டாட்சியராக அபிநயா, டிஎஸ்பியாக லில்லி கிரேஷ் ஆகியோரும் அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

ஏற்கெனவே காவிரி - குண்டாறு இணைப்பு திட்ட சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக ரம்யாதேவி, காவல் கூடுதல் துணைக் கண்காணிப்பாளராக பி.கீதா, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக மு.பூவதி, சிறை காவல் கண்காணிப்பாளராக ருக்மணி பிரியதர்ஷினி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக த.விஜயலட்சுமி, மாவட்ட சமூக நல அலுவலராக ரேணுகா, மாவட்ட தீயணைப்பு அலுவலராக பானுப்பிரியா, டாஸ்மாக் மாவட்ட மேலாளராக வசுந்தரா தேவி, மாவட்ட சுகாதார துணை இயக்குநராக பா.கலைவாணி, மாவட்ட தொழில் மைய மேலாளராக திரிபுரசுந்தரி போன்ற பெண்களே பணியில் உள்ளனர்.

மேலும், கூட்டுறவு இணைப் பதிவாளராக உமா மகேஸ்வரி, மகளிர் திட்ட இயக்குநராக பிஜெ.ரேவதி, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநராக டி.கே.செண்பகவள்ளி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலராக உம்மல் கதீஜா, நபார்டு உதவி மேலாளராக ஜெயஸ்ரீ, அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வராக புவனேஸ்வரி பணிபுரிகின்றனர்.

துறைகளின் ஆய்வுக் கூட்டங்களில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்கின்றனர். பெண் விடுதலைப் போராளியும் முதல் பெண் மருத்துவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த ஊரில் பெண் ஆளுமைகள் முக்கிய பதவி வகிப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments