புதுக்கோட்டை மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக பொது மக்கள் குறைகளை தெரிவிக்க தொலைபேசி எண் வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தகவல்!புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை 04322 222989 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் முழு ஊரங்கு காலங்களில் மக்களின் குறைகளை கேட்டு அவர்களுக்கு நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்வு பிரிவு கட்டுப்பாட்டு அறையில் இயங்கி வரும 04322-222989 என்ற தொலைபேசி எண்ணிற்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். 

பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments