நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பொதுமக்கள் கருத்துகளை அனுப்ப மின்னஞ்சல்: நீதிபதி ராஜன் குழு அறிவிப்பு!



நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்பபுகள் பற்றி ஆராய அமைக்கப்பட்ட உயர்நிலை குழுவின் முதல் ஆலோசனை கூட்டம், ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் கடந்த 14-ந்தேதி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது.

அதில் சில கருத்துகள் பேசப்பட்ட நிலையில், மருத்துவக்கல்வி இயக்ககத்திடமும் சில ஆவணங்களை கேட்டு பெற்று இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.அதன் தொடர்ச்சியாக தற்போது இதுதொடர்பாக பொதுமக்களும் கருத்து தெரிவிக்க ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. 

இதுகுறித்து அரசு அமைத்த ஆணையத்தின் ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாடு அரசால் ‘நீட்’ தேர்வின் மூலம் மருத்துவ சேர்க்கையில் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இதற்கு பொது மக்கள் தங்களின் கருத்துகளை 5 பக்கங்களுக்கு மிகாமல் neetimpact2021@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, நீதிபதி ஏ.கே.ராஜன் உயர்நிலைக்குழு, மருத்துவ கல்வி இயக்ககம் (3-வது தளம்), கீழ்ப்பாக்கம், சென்னை-600010 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ, நேரடியாக மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில் வைக்கப்பட்டுள்ள தனிப்பெட்டியிலோ வருகிற 23-ந்தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்' என்று தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments