முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு! விரைவில் விசாரணை!!



தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு 23 ஆயிரத்து 644 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பழனியப்பன் தோல்வியடைந்தார்.

இதையடுத்து, விஜயபாஸ்கர் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் பழனியப்பன் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், “தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் ஆகியவை வினியோகித்து முறைகேடாக விஜயபாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் செலவை அதிகம் செய்துள்ளார். அரசு அதிகாரிகள் உதவியுடன் ஓட்டு எந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறையில் உள்ள பாதுகாப்பு எந்திரங்களிலும் முறைகேடு செய்துள்ளார். எனவே, இவ்வாறு பல முறைகேடுகள் செய்து விஜயபாஸ்கர் வெற்றி பெற்றுள்ளதால், அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments