ஆவுடையார்கோவில் அருகே போரானூர் கிராமத்தில் இறந்து கிடந்த புள்ளிமான்!ஆவுடையார்கோவில் அருகே போரானூர் கிராமத்தில் நேற்று ஒரு புள்ளிமான் இறந்து கிடந்தது.

வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி கிராமத்துக்குள் வந்த புள்ளி மானை வந்தபோது, நாய் கடித்து இறந்ததா? அல்லது யாராவது அடித்துக்கொன்றார்களா? என்று தெரியவில்லை. 

இது குறித்து திருப்புனவாசல் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து வனத்துறையினர் கால்நடைமருத்துவரை அழைத்து வந்து அந்த இடத்திலேயே புள்ளிமானை உடற்கூறு ஆய்வு செய்து புதைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments