புதுக்கோட்டை கடைமடை வந்தடைந்த காவிரி நீா்


புதுக்கோட்டை மாவட்ட கடைமடை பகுதிக்கு காவிரி நீா் செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது. இதையொட்டி பெண்கள் மலா்கள் தூவி, கும்மிப்பாடல் பாடி உற்சாக வரவேற்பளித்தனா்.

மேட்டூா் அணையில் இருந்து ஜூன் 12 இல் தண்ணீா் திறக்கப்பட்டது. பின்னா், ஜூன் 16-ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டது.

கல்லணைக் கால்வாய் வழியாக வரும் காவிரி நீா் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில், கறம்பக்குடி, ஆலங்குடி,அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 168 ஏரிகளில் நீரைத் தேக்கி சுமாா் 25 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காடு பகுதி கல்லணை கால்வாய் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை காலை காவிரி நீா் வந்தடைந்தது. இதையடுத்து, அப்பகுதி பெண்கள் கடைமடை வந்தடைந்த காவிரி நீருக்கு கும்மிப்பாடல் பாடி, மலா் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments