பள்ளிவாசல் இமாம்கள், முஅத்தின்கள் மற்றும் மதரஸா ஆசிரியர்களுக்கு கொரோனா உதவித்‌ தொகை வழங்க வேண்டும் - ஜமாஅத்துல் உலமா சபை வலியுறுத்தல்!

தமிழக பள்ளிவாசல் இமாம்கள், முஅத்தின்கள் மற்றும் மதரஸா ஆசிரியர்களுக்கு கொரோனா உதவித்‌ தொகை வழங்க வேண்டும் என சிறுபான்மை நலம் மற்றும் வக்ஃப் வாரிய துறையின் அமைச்சரான செஞ்சி K.S.மஸ்தான் அவர்களை நேரில் சந்தித்து தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

கொரோனா காலத்தில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம்கள், முஅத்தின்கள் உள்ளிட்ட பள்ளி பணியாளர்கள் மற்றும் மதரஸா ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு உரிய நிவாரண உதவித்தொகையை வழங்க வேண்டுமென சிறுபான்மை நலம் மற்றும் வக்ஃப் வாரிய துறையின் அமைச்சரான செஞ்சி K.S. மஸ்தான் அவர்களிடம் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் நிர்வாகிகள் நேரில் வலியுறுத்தினர்.

இப்படிக்கு
Dr. V.S. அன்வர் பாதுஷாஹ் உலவி

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments