புன்னகை அறக்கட்டளை சார்பில் மெய்யனூர்,அவத்தனிக்கோட்டை,சித்தக்கூர் கிராம பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கல்!


புன்னகை அறக்கட்டளை சார்பில் ஆவுடையார்கோவில் ஒன்றியம், துஞ்சனூர் ஊராட்சி மெய்யனூர், அவத்தனிக்கோட்டை, சித்தக்கூர் கிராம பகுதி முழுவதும் கொரோனா தாக்கத்தை குறைக்கும் விதமாகவும், பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் கப சுர குடிநீர் பொதுமக்களுக்கு இன்று ஜுன 6 ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் கொரோனா தடுப்பூசி தொடர்பாகவும் அனைவரும் எடுத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.

இதில் சமூக ஆர்வலர்கள் ஆ.சே.கலைபிரபு, சு.அப்பாசாமி, ஆசிரியர் திரு. சுரேஷ், மேலக்கரை.திரு.கணேஷ், பழனிவேல், ஆசிரியர்.திரு.முனிராஜ், ஆகியோர் கலந்து கொண்டு பாதுகாப்பான முறையில் கப சுர குடிநீர் வழங்கினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments