ஆவுடையாா்கோவில் ஒன்றியக் குழு கூட்டம்ஆவுடையார்கோவில் ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் தலைவர் உமாதேவி தலைமையிலும், துணைத்தலைவர் பிரியா குப்பு ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரப்பன், குமார வேலன் முன்னிலையிலும் நடந்தது.

கூட்டத்தில் அமரடக்கி ஒன்றியக்குழு தி.மு.க. உறுப்பினர் சரண் சிவசங்கர் பேசுகையில், கூட்ட அரங்கில் எடப்பாடி பழனிசாமி படத்தை எடுத்து விட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை வைக்க வேண்டும் என்றார். இதற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் பாலசுந்தரி கூத்தையா எதிர்ப்பு தெரிவித்து, எடப்பாடி பழனிசாமி படத்தை எடுக்கக்கூடாது என்றார். இதனால், கூட்டத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அவர்களை தலைவர் சமாதானப்படுத்தினார். பின்னர் உறுப்பினர்கள் தங்களது வார்டு பகுதிகளில் உள்ள குறைகள் குறித்து பேசினர். 

ஒன்றிய அலுவலர் முருகையா தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர், ஒன்றிய மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments