உஷாரய்யா உஷாரு: கோபாலப்பட்டிணம் மக்களே! நீங்கள் வாட்ஸ்அப்பில் போட்டோ அனுப்பாமலே மின் கட்டணம் வந்திருந்தால்! இதை செய்யுங்கள்!!கோபாலப்பட்டிணத்திற்கு ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இருந்து மின் அளவீட்டை (EB Reading) கணக்கெடுக்கும் ஊழியர்கள் இந்த மாதம் கணக்கெடுக்க வீடுகளுக்கு வரமாட்டார்கள் என்றும், உங்கள் வீட்டின் மின் கணக்கீடு தகவல்களை நீங்களே உங்களது வீட்டிலிருந்து போட்டோ எடுத்து, வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வைத்து மின் கணக்கீட்டை பதிவு செய்து கொள்ளலாம் என GPM மீடியாவில் பதிவிட்டு இருந்தோம்.

அதனடிப்படையில் பலரும் அந்த விஷயங்களை பின்பற்றி மின் கணக்கிடும் அலுவலருக்கு வாட்ஸ்அப் மூலமாக குறுந்தகவல் அனுப்பி தங்களுடைய மின் கணக்கினை பதிவு செய்து கொண்டனர். ஆனால் ஏற்கனவே ஒரு சில பகுதி மக்களுக்கு மின்கட்டணம் பதிவு செய்யப்பட்டதாக குறுந்தகவல் மற்றும் ஈமெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாத கணக்கின் அடிப்படையில் பதிவிடப்பட்ட மின் கட்டணம் ஆகும்.
   
எங்களுக்குத்தான் மின் கட்டணம் வந்துவிட்டதே.?

இவ்வாறு கணக்கிடுவதன் மூலமாக சிலருக்கு மிகக் குறைந்த மின் கட்டணமும், அதேபோல ஒரு சிலருக்கு அதிக மின் கட்டணமும் வந்திருக்கும். இதன் மூலம் குறைந்த கட்டணம் வந்துள்ள சிலர் உடனடியாக மின் கட்டணத்தை செலுத்தி விடுவார்கள். ஆனால் இப்படி குறைந்த மின் கட்டணத்தை செலுத்தும் பொழுது ஒரு சிக்கல் ஏற்பட அதிகளவு வாய்ப்புள்ளது. குறிப்பாக அடுத்த முறை மின் கணக்கீடு செய்யும் பொழுது நீங்கள் அதிகளவு மின்சாரம் பயன்படுத்தியதை போன்று கணக்கீடு செய்ய அதிகளவு வாய்ப்புள்ளது. உதாரணமாக 1 முதல் 100 யூனிட் வரை மின்சாரம் இலவசம், அதே போல 101 முதல் 200 வரை ரூ.1.5 காசு என கணக்கிடப்படுகிறது. இவ்வாறாக கணக்கீடும் பொழுது உங்களுடைய மின்சாரக் கட்டணம் அதிகமாக வரலாம். எனவே தற்பொழுது சொல்லப்பட்டுள்ளதை போன்று  போட்டோ எடுத்து முன்பு கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாத கணக்கின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்டணத்தை நீக்கி விட்டு புதிய மின் கட்டணத்தை  வீட்டின் மின் கணக்கீடு தகவல்களை நீங்களே உங்களது வீட்டிலிருந்து போட்டோ எடுத்து, வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள்.

எனவே பொதுமக்கள் வாட்ஸ்அப் மூலமாக குறுந்தகவல்களை அனுப்புவதன் மூலம் மீண்டும் இதிலுள்ள தகவல்களை மாற்றி சரியான மீன் கணக்கிட்டு பதிவு செய்ய முடியும்.

சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள:

GPM மீடியா டீம்

உஸ்மான் ஆலிம், கோபாலப்பட்டிணம்.
போன்: 95242 94171
வாட்ஸ்அப்: wa.me/919524294171

GPM மீடியா: wa.me/918270282723

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments