புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன கருவிகள் மானிய விலையில் வினியோகம்: வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்!நுண்ணீர் பாசன முறையில் குறைந்த அளவு நீரைக் கொண்டு அதிக அளவுப்பரப்பில் சாகுபடி செய்ய இயலும். இதனால் நீர் விரயமாவது குறைவதோடு பயிருக்கு தேவையான நீர் நேரடியாக பயிரின் வேர்ப்பகுதிக்கு செல்வதால் பயிர் நன்கு செழித்து வளர்ந்து அதிக விளைச்சல் கொடுப்பதோடு களைகளின் வளர்ச்சியும் கட்டுப்படுத்தப்படுகிறது.

பயறுவகை பயிர்களுக்கு தெளிப்பு அல்லது மழைத்தூவான் போன்ற நுண்ணீர் பாசனக்கருவிகளும், மக்காச்சோளம், கரும்பு, தென்னை போன்ற பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனக் கருவிகளும் நிறுவலாம். நடப்பு ஆண்டில் புதுக்கோட்டை வட்டாரத்தில் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தில் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனக் கருவிகள் 350 எக்டேர் பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நுண்ணீர் பாசன கருவிகள் நிறுவ சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது. 

இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ள விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதியின் உதவி வேளாண்மை அலுவலர்களிடம் கணினி சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, நில வரைபடம், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மண் மற்றும் நீர்ப் பரிசோதனை சான்று, சிறு மற்றும் குறு விவசாயிகளாக இருப்பின் அதற்கான சான்று போன்ற ஆவணங்களை கொடுத்து நுண்ணீர் பாசன கருவிகளை அமைத்து பயனடையுமாறு புதுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் செல்வி கேட்டுக்கொண்டுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments