அண்ணா பல்கலை. மறுதேர்வு, செமஸ்டர் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு: மாற்றப்பட்ட தேர்வு அட்டவணையும் வெளியானது


அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் மறுதேர்வு மற்றும் செமஸ்டர் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதேபோல மாற்றப்பட்ட தேர்வு அட்டவணையும் வெளியாகியுள்ளது.

பொறியியல் படிப்புகளுக்கான நவம்பர்/ டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள், பிப்ரவரி/ மார்ச் / ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டு, ஏப்ரலில் தேர்வு முடிவுகள் வெளியாகின. ஆனால், அதில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்ததால், மறுதேர்வு நடத்த உயர் கல்வித்துறை உத்தரவிட்டது.

பிப்ரவரி மாதம் நடந்த தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவர்கள் விரும்பினால் அவர்களும் இத்தேர்வினை எழுதலாம். தேர்வு 3 மணி நேரம் பழைய முறையில் நடைபெறும். பல்கலைக்கழகம் கரோனாவிற்கு முன்பு பின்பற்றிய பழைய வினாத்தாள்கள் முறையே கடைப்பிடிக்கப்படும். இத்தேர்வுகள், தமிழகத்திலுள்ள மற்ற பல்கலைக்கழகங்கள் நடத்தியது போலவே நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மறுதேர்வு மற்றும் ஏப்ரல்/ மே மாத செமஸ்டர் தேர்வு (முதுகலை 2-வது செமஸ்டர் தவிர்த்து) எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதேபோல சில வகுப்புகளுக்கான தேர்வுக் கால அட்டவணையும் மாற்றப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

ஹால் டிக்கெட்டைத் தரவிறக்கம் செய்ய https://coe1.annauniv.edu என்ற மாணவர்கள் லாகின் போர்ட்டலில் நுழைந்து தகவல்களை உள்ளிட வேண்டும்.

திருத்தப்பட்ட தேர்வுக் கால அட்டவணையைக் காண:

கூடுதல் விவரங்களுக்கு:

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments