புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா MLA அவர்களை சந்தித்த கோபாலப்பட்டிணம் இளைஞர்


புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா MLA அவர்களை சந்தித்த கோபாலப்பட்டிணம் இளைஞர்!

புதுகை மாவட்டம் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர்.டாக்டர்.முத்துராஜா MLA அவர்களால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளோடு தங்கியிருக்கும் உறவினர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றுவருகிறது.

 இந்த நிகழ்வில் 100க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக இரண்டு வகை உணவுகள் வழங்கப்பட்டது.

இந்த அருமையான நிகழ்வை கண்ட கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த சகோ.அன்வர் அவரை சந்தித்து தங்களின் இதுபோன்ற செயல்கள் பொதுமக்களிடத்தில் நல்ல வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவருகிறது.

 என்றும் தங்களின் இதுபோன்ற மனிதநேய சேவைகள் தொடரவேண்டும் என்றும் வாழ்த்துக்களை கூறினார்.

இதற்கு பதிலளித்த அவர் இதுபோன்ற மனிதநேய பணிகளை மக்களின் சார்பாக செய்வதாகவும் தங்களுக்கு எந்த உதவி தேவைப்படும்பொழுதும் தன்னை அணுகுமாறும் தனது தனிப்பட்ட தொடர்புஎண்ணை கொடுத்து அழைக்குமாறு கூறினார்.பின்பு நலம் விசாரித்து நன்றியுடன் சேவையை தொடர்ந்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments