ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் மளிகை பொருட்களை வீடுகளுக்கே சென்று விற்பது தொடர்பான ஆலோசனை கூட்டம்!ஆவுடையார்கோவிலில் மளிகை பொருட்களை வீடுகளுக்கே சென்று விற்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் தாசில்தார் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமாரவேல், குமரன், துணைத் தாசில்தார் ஜபருல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஆவுடையாா்கோவில், மீமிசல், ஒக்கூர், ஏம்பல் பகுதி மளிகைக்கடை வர்த்தகர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மளிகை பொருட்களை வீடுகளுக்கு சென்று விற்கும் போது, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments