R.புதுப்படினத்தில் மின் கம்பி அறுந்து விழுந்து ஆடு பலி; தமுமுக, தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புகள் மின்வாரியத்தை கண்டித்து கண்டன அறிக்கை!



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகில் உள்ள R.புதுப்பட்டினத்தில் மின் கம்பி அறுந்து விழுந்து ஆடு பலியானது. இதையடுத்து தமுமுக, தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புகள் கண்டன மின்வாரியத்தை கண்டித்து அறிக்கை விடுத்துள்ளனர்.

மனிதநேய மக்கள் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பொறுப்பு குழு தலைவர் வழக்கறிஞர் சேக் தாவூதீன் 15.06.2021 அன்று வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகில் உள்ள ஆர்.புதுப்பட்டினம் கிராமத்தில் மின்சார கம்பிகள் அறுந்து விழுவது வாடிக்கையாக உள்ளது. 14 ஜூன் காலை 11.30 மணியளவில் ஆர்.புதுப்பட்டினம் பள்ளிவாசல் அருகில் மின் கம்பி அறுத்து விழுந்து ஆடு ஒன்று உயிர் இழந்து உள்ளது. இந்த நிகழ்வின் பொழுது 2 பெண்கள் உள்பட மூவர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பி உள்ளனர். கடந்த மாதம் இரவும் இது போன்று மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது. மின் கம்பிகளை நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் உள்ள பழைய மின் கம்பிகளை மாற்ற 15.04.2015 புதன் கிழமை அன்று காலை 11.00 மணியளவில் மீமிசலில் நடைபெற்ற பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அப்போதைய ஊராட்சி மன்ற தலைவர் முகம்மது மீராசா அவர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கணேஷ் அவர்கள் மின்சார வாரிய அதிகாரிகளுக்கு மின் கம்பிகளை மாற்ற உத்தரவிட்டும் இதுநாள் வரை ஒரு சின்ன வேலை கூட பார்க்கவில்லை. இந்த செயலை வன்மையாக கண்டிப்பதுடன் உடனடியாக மின்கம்பிகளை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

இவண்,
தமுமுக
ஆர்.புதுப்பட்டினம் கிளை,
புதுக்கோட்டை மாவட்டம்

ஆர்.புதுப்பட்டினம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை  வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

மின்சார வாரியமே! உடனே நடவடிக்கை எடு!

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகில் உள்ள ஆர்.புதுப்பட்டினத்தில் அவ்வப்போது மின் கம்பிகள் அறுந்துவிழுவது வாடிக்கையாகி வருகிறது.  (14/06/2021) காலை 11:30 மணி அளவில் ஆர்.புதுப்பட்டினம் பள்ளிவாசல் அருகில் உள்ள ஒரு தெருவில் மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளது. எப்போதுமே குழந்தைகள் விளையாடும் அத்தெருவில் அதிர்ஷ்டவசமாக எந்தவித மனித உயிர் சேதமும் ஏற்படாமல் ஒரு கர்ப்பிணி ஆடு இதற்கு பலியாகியுள்ளது. 

இதே போல கடந்த மாதமும் வேறொரு தெருவில் மின் கம்பி அறுந்து விழுந்தது. அப்போது அதிஷ்டவசமாக மக்கள் நடமாட்டம் இல்லாததாலும் ஆரம்பத்திலேயே அதைக் கண்டறிந்ததாலும் எந்தவித உயிர்ச்சேதமும் இல்லாமல் மக்கள் உயிர்தப்பினர்.

மின்சார வாரியத்திற்கு இது குறித்து முறையான புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆர்.புதுப்பட்டினத்தில் உள்ள பெரும்பாலான மின்கம்பிகள் நாற்பது வருடங்கள் பழமையானது. எனவே இதுபோல இன்னும் எத்தனை தெருக்களில் மின்கம்பிகள் அறுந்துபோய் விழுமோ என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். அத்தியாவசியத் தேவைக்கு கூட வெளியில் நடமாட அஞ்சுகின்றனர். பொதுவாக ஊரில் உள்ள அனைத்து தெருக்களிலும் சின்னஞ்சிறு குழந்தைகள் ஓடி ஆடி விளையாடுவது அன்றாடம் இங்கு நடக்கும் நிகழ்வுகள்.

இன்று ஆட்டோடு போய்விட்டது. நாளை இது மனிதர்களுக்கும் ஏற்படாது என்ற எந்தவித உத்தரவாதமும் இல்லை. மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தும் வரை பொறுமை காக்காமல் மனித உயிர்களின் முக்கியத்துவத்தை விளங்கி மின்சார வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஊரில் உள்ள நாற்பது ஆண்டுகள் பழமையான மற்றும் பழுதடைந்துள்ள மின்கம்பிகளை உடனே கண்டறிந்து மாற்றித்தர வேண்டும். மேலும் உயிரிழந்த ஆடு-க்கு உரியவர்களிடம் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறையை கேட்டுக்கொள்கின்றோம்.

இது தவறும் பட்சத்தில் மக்களின் கொந்தளிப்பை கருத்தில் கொண்டு ஊர் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.

இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
ஆர்.புதுப்பட்டினம் கிளை,
புதுக்கோட்டை மாவட்டம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments