TNTJ புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக தெருக்கூத்து(சர்க்கஸ்) நடத்தும் 50 குடும்பங்களுக்கு 50 ஆயிரம் மதிப்புள்ள உணவு பொருட்கள் விநியோகம் செய்ப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் 50 குடும்பங்களுக்கும் அதிகமான தெருக்கூத்து சர்க்கஸ் நடத்தும் மக்கள் வசித்து வருகின்றார்கள். கொரோனா பேரிடர் காரணமாக மாநில அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் இந்த மக்கள் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து ஒருவேளை உணவிற்குக் கூட மிகவும் சிரமப்பட்டு வந்தார்கள்.
உணவின்றி தவிக்கும் தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று அவர்கள் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த விவரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்தது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பெயரில் TNTJ அன்னவாசல் கிளை நிர்வாகிகள் அந்தப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அந்த மக்களுக்கு ஆறுதல் கூறி அவர்களின் நிலையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்தனர்.
அதனடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 13/06/21 சனிக்கிழமையன்று அங்கிருந்த 50 குடும்பங்களுக்கு ரூ.1,000/- வீதம் மொத்தம் ரூ.50 ஆயிரம் மதிப்புடைய அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை நேரில் சென்று அந்த மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!
பிறர் நலம் நாடுவதுதான் இஸ்லாம் என்கிற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொற்றொடருக்கு ஏற்ப..,
பசியால் வாடிய மக்களின் துயர் தீர்க்க தங்களால் இயன்ற சிறு உதவியை அளித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்திற்கு அந்த மக்கள் தங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
என்றும் மக்கள் பணியில்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
புதுக்கோட்டை மாவட்டம்.
![]() |
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.