புதுக்கோட்டை: சாலையில் கிடந்த ரூ.18 ஆயிரம் மதிப்பிலான செல்போன் - காவல்நிலையத்தில் ஒப்படைத்த 4 ஆம் வகுப்பு சிறுவன்




புதுக்கோட்டை: சாலையில் கிடந்த ரூ.18 ஆயிரம் மதிப்பிலான செல்போன் - காவல்நிலையத்தில் ஒப்படைத்த 4 ஆம் வகுப்பு சிறுவன்

பொன்னமராவதியில்சாலையில் கிடந்த ரூபாய் 18 அயிரம் மதிப்பிலான செல்போனை மீட்டு  காவல்நிலையத்தில் ஒப்படைத்த 4 வயது சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சாலையில் கிடந்த செல்போன்

பொன்னமராவதி அருகே உள்ள தொட்டியபட்டி ஊராட்சி ஜெ.ஜெ. நகர் சாலையில் ஜூலை 8 ஆம் தேதி இரவு 8.30 மணி அளவில் அந்த வழியாக  சென்ற 4 ஆம் வகுப்பு மாணவன்  பிரகாஷ்ராஜ்  சாலையில் செல்போன் கிடப்பதை பார்த்துள்ளார்.
அப்போது நூலிடையில் உயிரை பனையம் வைத்து எதிரே வந்த லாரியை வழிமறித்து செல்போன் உடையாத நிலையில் மீட்டுள்ளார்.

சாலையில் கிடந்த செல்போனை உரியவரிடம் ஒப்படைக்கும் பொருட்டு பொன்னமராவதி காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளர் தனபாலன் அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.  இந்த சிறிய வயதில், பிரகாஷ்ராஜின்  செயலை கண்டு வியந்த  பொன்னமராவதி காவல் துணைக்கண்காணிப்பாளர் செங்கமலக் கண்ணன் மற்றும் காவல் ஆய்வாளர் தனபாலன் உள்ளிட்ட சக காவலர்கள் சிறுவனை பாராட்டியுள்ளனர். மேலும் ஒப்படைக்கப்பட்ட செல்போன் உரியவரான நெற்குப்பை அரசுப் பள்ளியில் பணியாற்றும் அரசு பள்ளி ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் என்பவரிடம் சிறுவனின் கரங்களால் ஒப்படைக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments