புதுக்கோட்டையில் பலத்த காற்று வீசியதால் இரும்பு தடுப்புகள், பதாகைகள் சரிந்தன




புதுக்கோட்டையில் பலத்த காற்று வீசியதால் இரும்பு தடுப்புகள், பதாகைகள் சரிந்தன. சாலையில் புழுதி பறந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
பலத்த காற்று வீசியது
புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் வெயில் அடிக்க தொடங்கியது. பகல் 12 மணி அளவில் பலத்த காற்று வீச தொடங்கியது. இந்த காற்று விட்டு, விட்டு வேகமாக வீசியது.


இதனால் சாலையில் கிடந்த குப்பைகள், புழுதிகள் பறந்தன. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். ஒரு சில இடங்களில் சாலையோரம் இருந்த இரும்பு தடுப்புகள், கடைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த பதாகைகள் கீழே சரிந்து விழுந்தன. தொடர்ந்து இந்த காற்று மாலையிலும் வீசியபடி இருந்து. சாலையோர கடைகளில் இருந்த மேற்கூரை காற்றில் ஆடியது.
ஆடி மாத பிறப்பையொட்டி...
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே சாலையோர மரக்கிளைகள் காற்றில் சாய்ந்தாடின. மேலும் அதேபகுதியில் சாலையேராம் விற்பனைக்காக தொங்கவிடப்பட்டிருந்த திரைகள் (ஸ்கிரீன்) காற்றில் பறந்தது. அதனை வியாபாரிகள் இறுகப்பிடித்து கட்டி தொங்கவிட்டனர். அவை காற்றில் பறந்தபடி இருந்தன.
இதேபோல சிறை நிர்வாகத்தால் நடத்தப்படும் பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு இருந்த இரும்பு தடுப்பு காற்றில் சாய்ந்து விழுந்து கிடந்தது. இந்த திடீர் காற்றினால் சீதோஷ்ண நிலையில்மாற்றமடைந்திருந்தது.
பொதுவாக ஆடி மாதத்தில் காற்றின் வேகம்அதிகமாக இருக்கும். ஆடி காற்றில் அம்மியும் பறக்கும் என பழமொழி உண்டு. இந்த நிலையில் ஆடி மாதம் வருகிற சனிக்கிழமை பிறக்கின்ற நிலையில் தற்போது காற்று வீச தொடங்கியதாக கூறப்படுகிறது. காற்றின் வேகத்தை பார்க்கையில் ஆடி மாத பிறப்பை முன்கூட்டியே உணர்த்துவதாக பொதுமக்கள் பேசிக்கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments