புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த நிதி ஆண்டில் வங்கிகளில் ரூ.5 ஆயிரத்து 610 கோடியே83 லட்சம் கடன் வழங்க இலக்கு




புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021-22-ம் நிதி ஆண்டில் கடன் வழங்குவதற்கான திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 2021-22-ம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையை மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை அடிப்படையாக கொண்டு பல்வேறு துறைகளில் வங்கிகள் கடன் வழங்க ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட அறிக்கையை கலெக்டர் கவிதா ராமு வெளியிட வங்கியின் காரைக்குடி மண்டல முதன்மை மேலாளர் லட்சயா பெற்றுக்கொண்டார். இதில் மாவட்டத்தில் வங்கிகள் மூலம் மொத்தம் ரூ.5 ஆயிரத்து610 கோடியே 83 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.


விவசாயத்துறை
இந்த கடன் திட்ட அறிக்கையில் விவசாயத்துறைக்கு ரூ.4 ஆயிரத்து424 கோடியே 15 லட்சமும், தொழில் துறைக்கு ரூ.262 கோடியே 61 லட்சமும், கல்விக்கடன், வீட்டுக்கடன் மற்றும் இதர துறைகளுக்கு ரூ.924 கோடியே 7 லட்சமும் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரமேஷ், மகளிர் திட்ட இயக்குனர் ரேவதி, மாவட்ட தொழில் மைய மேலாளர் திரிபுரசுந்தரி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments