புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளி மாணவா்கள் கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அழைப்பு விடுத்துள்ளாா்.




புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளி மாணவா்கள் கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தங்களது தேசிய அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். 9ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வி பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் முந்தைய வகுப்பில் 40 சதவிகிதத்துக்கும் குறையாமல் மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட ஆவணங்களை இணைக்க வேண்டும்.
மேலும் வாசிப்பாளா் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு 9ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் பாா்வைத் திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளின் தேசிய அடையாள அட்டை நகல், அவா்களது வாசிப்பாளா்களின் விவரம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், புதிய பேருந்து நிலையம் அருகில், புதுக்கோட்டை. கடைசி நாள் ஜூலை 31. மேலும் விவரங்களுக்கு 04322 - 223678.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments