நீண்ட கால இடைவெளிக்கு பின் கோபாலப்பட்டிணத்தில் புதிய ஜமாஅத் நிர்வாகம் தேர்வு!!கோபாலப்பட்டிணத்தில் புதிய ஜமாத் நிர்வாகம் நேற்று வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சரியான முறையில் ஜமாத் நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 9.07.2021 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ-விற்கு பிறகு இளைஞர்கள் ஒன்றிணைந்து ஊர் பொதுமக்கள் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பெரியவர்கள் ஐந்து நபர்கள் மற்றும் இளைஞர்கள் 5 பேர் என்று 10 பேர் கொண்ட குழு ஒன்று தேர்வு செய்யப்பட்டது. இவர்களின் பணியானது புதிய நபர்களை கொண்டு புதிய நிர்வாகத்தை தேர்வு செய்ய கோபாலப்பட்டிணத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் திறமையான நபர்களை கண்டறிந்து 16.07.2021 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ-விற்கு பிறகு நடைபெறும் கூட்டத்தில் அறிமுகம் செய்வார்கள் என அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் நேற்று 16.07.2021 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ-விற்கு பிறகு புதிய நிர்வாகம் தேர்வு செய்யும் கூட்டம் நடைபெற்றது. இதில் இரண்டு தலைமை கொண்ட ஜமாஅத் நிர்வாகம் பொதுமக்கள் மற்றும் அல்வின்னர் வர்த்தக சங்கம் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டது.

இவர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகளாகும்.

அதில் நிர்வாகிகள் பின்வருமாறு:

தலைவர்: 
1.ASM. செய்து முஹம்மது  
2.OSM. முஹம்மது அலி ஜின்னா

துணைத்தலைவர்: MKR.முஹம்மது மீராசா

செயலாளர்: M.ராஜா முஹம்மது

துணை செயலாளர்: ME.கலந்தர்

இணை செயலாளர்: VE.சாகுல் ஹமீது

பொருளாளர்: KM.முகமது உசேன்

கணக்காளர்: மு.மு.சர்புதீன்

நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள்:

1.J.இக்பால் 2.K.சவுக்கத் அலி 3.சித்திக் ரகுமான் 4.M.சித்திக் 5.N.அக்பர் 6.R.M.A.இஸ்சதீன் 7.M.ரகுமான் 8.S.அப்பாஸ் 9.S.சாகுல் 10.A.சாதிக் (மங்களம்) 11.அ.மு.நஸார் 12.SMY.யூசுப் 13.OS.யாசின் 14.M.S ஷேக்

கோபாலப்பட்டிணம் வரலாற்றில் இரட்டை தலைமை கொண்டு ஜமாஅத் நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.  

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments