ஒரே நேரத்தில் இனி 4 சாதனங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தலாம்!
ஒரே நேரத்தில் 4 சாதனங்களில் பயன்படுத்தப்படக்கூடிய மல்டி டிவைஸ் சப்போர்ட் வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பீட்டா வெர்சனில் வாட்ஸ்அப் மல்டி டிவைஸ் சப்போர்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு முதல் அறிறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ் ஆப்பில், மல்டி டிவைஸ் சப்போர்ட் குறித்து யூசர்கள் நீண்ட நாட்களாக கேட்டு வருகின்றனர். தற்போது வாட்ஸ் அப் செயலியை மற்றொரு சாதனங்களில் பயன்படுத்துவதற்கு மொபைல் போனின் உதவி தேவைப்படுகிறது. போன் இல்லாமல் வாட்ஸ் அப் பயன்படுத்த முடியாது. சார்ஜ் குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் மொபைல் இல்லாமல் இருந்தால் வாட்ஸ் ஆப் செயலி சேவையை யூசர்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது.


இதனை மாற்ற வேண்டும் என வாட்ஸ்அப்புக்கு கோரிக்கை வைத்த யூசர்கள், இதற்கு தேவையான வகையில் போதுமான அப்டேட்டை செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். இதுகுறித்து அண்மையில் பேசிய வாட்ஸ் அப் நிர்வாக இயக்குநர் வில் காத்கார்ட், வாட்ஸ் ஆப்பின் மல்டி டிவைஸ் சப்போர்ட் அப்டேட் மேம்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். அதன்படி, ஒரே நேரத்தில் விண்டோஸ், லேப்டாப், டேப்லெட் மற்றும் மேக் கருவிகளில் ஓபன் செய்யும் அளவிற்கு ஐ.ஓ.எஸ் தரம் மேம்படுத்தப்படுகிறது எனக் கூறியிருந்தார். ஸ்மார்ட்போன்களின் உதவி இல்லாமல் மற்றொரு டிவைஸில் பயன்படுத்தும் வகையில் வாட்ஸ்அப்பில் அப்டேட் செய்யப்படுவதாகவும் விரைவில் யூசர்களின் பயன்படுத்தலாம் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பீட்டா வெர்சனில் வாட்ஸ்அப் மல்டி டிவைஸ் சப்போர்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது வாட்ஸ்அப் யூசர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இது தொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், யூசர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வாட்ஸ் அப் மல்டி டிவைஸ் சப்போர்ட் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் அனைத்து யூசர்களும் இதனை பயன்படுத்த முடியாது. சோதனை முறையில் மட்டுமே இருப்பதால் குறிப்பிட்ட யூசர்கள் மட்டுமே பயன்படுத முடியும் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

பீட்டா வெர்சன் வாட்ஸ்அப் யூசர்கள் தற்போது மல்டி டிவைஸ் சப்போர்ட்டை உபயோகப்படுத்தலாம். இன்னொரு முக்கியமான தகவல் என்னவென்றால், ஸ்மார்ட்போன் இல்லாமல், இதனை பயன்படுத்த முடியும். மேலும், ஏதாவதொரு டிவைஸில் டேட்டா உபயோகம் இருந்தாலே போதும். இதற்கு முன்பு கம்யூட்டரில் கியூ ஆர் கோட் மூலம் வாட்ஸ் ஆப்-ஐக் கனெக்ட் செய்திருந்தால், மொபைலில் டேட்டா இல்லை என்றாலும் அல்லது கம்பயூட்டரில் டேட்டா இல்லை என்றாலும் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாது. தற்போது இரண்டில் ஏதேனும் ஒன்றில் வெப் கனெக்ஷன் இருந்தால் போதும்.

யூசர்கள் அனுப்பும் அனைத்து மெசேஜ்களும் என்ட் -டூ-என்ட் என்கிரிப்சன் செய்யப்பட்டிருக்கும் என்பதால், மெசேஜ் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது என வாட்ஸ் அப் கூறியுள்ளது. கியூ ஆர் கோட் அல்லது பொதுவான கீ மூலம் வாட்ஸ் ஆப்பை மல்டி டிவைஸ்களில் பயன்படுத்தலாம். அனைத்து யூசர்களுக்கும் விரைவில் இந்த அம்சம் கிடைக்க உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments