புதுக்கோட்டை மாவட்டத்தில் 26 தாசில்தார்கள் பணியிட மாற்றம்!!புதுக்கோட்டை மாவட்டத்தில் 26 தாசில்தார்-தனி தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தாசில்தார் மற்றும் தனி தாசில்தார்களை மாற்றி மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார். அதன்படி காவிரி-வைகை குண்டாறு தனி தாசில்தார் செந்தில்குமார் புதுக்கோட்டை தாசில்தாரராகவும், அறந்தாங்கி தாசில்தார் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர் பிரவீனா மேரி திருமயம் தாசில்தாரராகவும், குளத்தூர் தனி தாசில்தார் செந்தில்நாயகி ஆலங்குடி தாசில்தாரராகவும் மாற்றப்பட்டனர்.

புதுக்கோட்டை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம் காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு திட்ட தனி தாசில்தார் முத்துக்கருப்பன் இலுப்பூர் தாசில்தாரராகவும், புதுக்கோட்டை அகதிகல் நலம் மாவட்ட கலெக்டர் அலுவலக தனி தாசில்தார் சரவணன் விராலிமலை தாசில்தாரராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

மணமேல்குடி தனி தாசில்தார் காமராஜ், அறந்தாங்கி தாசில்தாரராகவும், அறந்தாங்கி தனி தாசில்தார் வெள்ளைச்சாமி ஆவுடையார்கோவில் தாசில்தாராகவும், பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் ராஜா மணமேல்குடி தாசில்தாரராகவும் மற்றப்பட்டுள்ளனர். மேலும் 18 தனி தாசில்தார்கள் உள்பட மொத்தம் 26 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments