தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல், பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு இன்று ஜூலை 26 முதல் தொடக்கம்






தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது.  பொறியியல் படிப்புகளுக்கும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

2021- 22 ஆம் கல்வி ஆண்டுக்கு அரசு கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் சேர்வதற்கு, ஆகஸ்டு 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை வகுப்பு களில் சேர விரும்பும் மாணவர்கள் tngasa.org மற்றும் tngasa.in ஆகிய இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்குனர் பூரணசந்திரன் அறிவித்துள்ளார்.

அதேபோல பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் இன்று முதல் www.tneaonline.org அல்லது www.tndte.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. கல்லூரி விண்ணப்ப பதிவு கட்டணங்களை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு பெறப்பட்ட அதே கட்டணங்களே பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆகஸ்ட் 24-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஆக.25-ம் தேதி ரேண்டம் எண் வெளியாகும்.

செப்.4-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

செப்.7 முதல் அக்.4 வரை கலந்தாய்வு நடைபெறும்.

அக். 20-ம் தேதிக்குள் கலந்தாய்வை முடித்து மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments