2-ம் நிலை காவலர் உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்: புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்!!



சீருடை பணியாளர் தேர்வுக்கான உடல்தகுதி தேர்வில் கலந்து கொள்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் போலீஸ், சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கான இரண்டாம் நிலை காவலருக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 2613 (ஆண்கள்- 1722 மற்றும் பெண்கள்-891) நபர்களுக்கு வருகிற 26-ந் தேதி முதல் புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் உடல் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தெரிவிப்பதாவது:-

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா விதி முறைகளை பின்பற்றி ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 500 நபர்களுக்கு மட்டுமே உடல் தகுதி தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பு கடிதம் ஏற்கனவே தமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வாணையம் www.tnusrbonline.org மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தொடர்ந்து நடைபெற இருக்கும் உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்ள வருபவர்கள் அழைப்புக் கடிதம், அடையாள அட்டை, அனைத்து கல்வி, விளையாட்டு சான்றுகள், என்.சி.சி, என்.எஸ்.எஸ். அசல் சான்றிதழ்கள் மற்றும் அதன் நகல்கள் கொண்டு வர வேண்டும். உடல்தகுதி தேர்வில் கலந்து கொள்ளும் அனைவரும் கண்டிப்பாக 4 நாட்களுக்குள் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட சான்றிதழ் கட்டாயம் கொண்டுவர வேண்டும். (உதாரணமாக 26-ந் தேதி கலந்த கொள்ளும் நபர்கள் 23-ந் தேதி முதல் 25-ந் தேதிக்குள் பரிசோதனை செய்து இருக்க வேணடும்). 

கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும். மைதானத்திற்குள் செல்போன், எலக்ட்ரானிக் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் கொண்டு வர அனுமதி இல்லை. மேலும் கலந்து கொள்ளும் நபர்கள் ஒரே மாதிரியான கலர் மற்றும் டி-சர்ட்களை அணிந்த வர அனுமதியில்லை.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments