கோபாலப்பட்டிணத்தில் சிறுவன் உள்பட 4 பேரை கடித்து குதறிய வெறிநாயை அடித்து கொன்ற இளைஞர்கள்! தெருநாய்களை ஒழிக்க முறையான நடவடிக்கை எடுக்குமா ஊராட்சி நிர்வாகம்??மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தில் 4 பேரை கடித்து குதறிய வெறி நாயை இளைஞர்கள் அடித்து கொன்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் பகுதிகளில் ஒரு வெறிநாய் சுற்றித்திரிந்தது. இந்த நிலையில் இன்று 25.07.2021 அங்கு சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று திடீரென்று ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்களையும், நடந்து சென்று கொண்டிருந்த பொதுமக்களை துரத்தி துரத்தி கடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அந்த வெறிநாயிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தனர்.

ஆனாலும் அந்த வெறிநாய் குடியிருப்பு பகுதிக்குள் சென்று விளையாடி கொண்டிருந்த சிறுவன் மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் மற்றும் நடந்து சென்று கொண்டிருந்த பொதுமக்கள் உள்பட 4 பேரை தொடர்ச்சியாக கடித்து குதறியது. பின்னர் அந்த வெறிநாய் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

வெறிநாய் கடியில் காயம் அடைந்தவர்கள் மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டு போட்டு, தடுப்பூசி செலுத்தி கொண்டு சிகிச்சைக்கு பின்பு வீடுகளுக்கு சென்றனர்.

இதற்கிடையில் ஆத்திரமடைந்த கோபாலப்பட்டிணம் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அந்த வெறி நாயை பிடித்து அடித்து கொன்றனர். பின்னர் அந்த நாயை குழி தோண்டி புதைத்தனர்.

கோபாலப்பட்டிணத்தில் வெறி நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிவதுடன் பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகளுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியும் வருகின்றது. எனவே ஊரே நாய் மயமாகும் முன்பு அவற்றை ஒழிக்க முறையான நடவடிக்கை எடுக்குமா ஊராட்சி நிர்வாகம்??

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments