கோபாலப்பட்டிணத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்!!கோபாலப்பட்டிணத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமசந்திரன் தலைமையில் குறைதீர்க்கும் முகாம் நேற்று 16.07.2021 நடைபெற்றது. இந்நிகழ்வில் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள்  கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர். குறிப்பாக கோபாலப்பட்டிணம் பொதுமக்கள் சார்பில்   அறந்தாங்கியில் இருந்து கோபாலப்பட்டிணத்திற்கு இயக்கப்பட்டு வந்த பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். மேலும் அவுலியா நகர் பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்க தாமதப்படுத்தி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

அதேபோன்று அவுலியாநகர் பகுதியில் கால்வாய் வசதி ஏற்படுத்தி தரும்படியும் மனு அளித்தனர். பொதுநல சேவை சங்கம் சார்பில் கோபாலப்பட்டிணத்தில் சமுதாய கூடம், ECR சாலையில் நிழற்குடை அமைக்க வேண்டும் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஆழ்குழாய் கிணறு அமைத்து தரவேண்டும் என கோரிக்கை மனுவை வழங்கினர்.

அதன் பிறகு இந்நிகழ்வில் ஆரம்பத்தில் பேசிய ஊராட்சிமன்ற துனைத்தலைவர் அவர்கள் அவுலியாநகர் பகுதிக்கு டிரான்ஸ்பாரம் வேலை விரைவாக நடக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்றும்  இன்னும் இரண்டு மாதத்தில் மழைகாலம் ஆரம்பமாக இருப்பதால் தாழ்வான அவுலியாநகர் பகுதி மூழ்கும் அபாயம் இருப்பதால் போர்க்கால  அடிப்படையில் கழிவுநீர் வாய்க்கால்  ஏற்படுத்தி  அவுலியாநகரில் கழிவுநீர் கடலில் கலப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

அவுலியாநகர் கழிவுநீர் வாய்க்காலை சரி செய்யாமல் விட்டுவிட்டால் சட்டமன்ற உறுப்பினர் முதல் அனைத்து அரசு அதிகாரிகள் வரை மழைகாலத்தில் இந்த அவுலியாநகர் மக்களின் அவலநிலையை நேரில் பார்வையிடும் சூழ்நிலை ஏற்படும் என்றும் அது நடக்காமல் இருக்க போர்க்கால அடிப்படையில் விரைந்து அவுலியாநகர் கழிவுநீர் வாய்க்காலை சரி செய்து தருமாறும் கேட்டுக்கொண்டார்.

மேலும் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிமன்ற மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளையும் சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடமும் மற்ற அரசு அதிகாரிகளிடமும் தெரிவித்தார். 


மனுவை பெற்றுக்கொண்ட சட்ட மன்ற உறுப்பினர் உடனடி நடவடிக்கையாக அறந்தாங்கி அரசு போக்குவரத்து கழக அதிகாரிக்கு தொடர்பு கொண்டு நாளை 17.07.2021 (இன்று) பேருந்தை இயக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் இன்று கோபாலப்பட்டிணத்திற்கு பேருந்து இயக்கப்படும் என்று எதிர்பாக்கலாம்.

இந்நிகழ்வில் ஆவுடையார்கோவில் ஒன்றியக் குழுத் தலைவர் உமா தேவி,ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர், கொடிக்குளம் மின்வாரிய உதவி பொறியாளர், நாட்டாணி புரசக்குடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் J.தாஹீர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள்,மீமிசல் கவுன்சிலர் ஐயா ரமேஷ், கோபாலப்பட்டிணம் கவுன்சிலர் கமர் நிஷா மற்றும் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments