தொண்டி அருகே மீன் ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து வாலிபர் பலிதொண்டி அருகே மீன் ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் சம்பை அருகே உள்ள வேம்பாரில் இருந்து தொண்டி வழியாக கட்டுமாவடி செல்ல இருந்த மீன் ஏற்றிவந்த சிறிய கண்டெய்னர் வாகனம் விபத்துக்குள்ளானது.

இந்த வாகனத்தில் பயணம் செய்த சாயல்குடி குதிரைமொழியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் அந்தோணிராஜ் (வயது 20) சம்பவ இடத்திலேயே பலியானர்.

தேவிபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா வழக்குப்பதிவு செய்து உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். வாகனத்தை சாயல்குடியைச் சேர்ந்த பெரியசாமி மகன் உலகு துரை (24) ஓட்டி வந்துள்ளார்.

நள்ளிரவில் தூக்க கலக்கத்தில் வாகனத்தை இயக்கியதால் கிழக்கு கடற்கரை சாலை ஓரம் வாகனம் கவிழ்ந்து, கண்டெய்னர் தனியாக வாகனம் தனியாக தூக்கிவீசப்பட்டது. இதில் இருந்த மீன்கள் சாலை ஓரம் சிதறிக்கிடந்தன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments