வடகாடு ஊராட்சியில் குடிதண்ணீரை முறைகேடாக பயன்படுத்தினால் ரூ.1000 வரை அபராதம்!!வடகாடு வடக்குப்பட்டியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் குடிதண்ணீர் பிரச்சினை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் இப்பகுதி மக்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் குடிதண்ணீரை அனைவருக்கும் தடையின்றி கிடைக்கவும், முறைப்படுத்தி வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. குடிநீர் தண்ணீரை ஒரு சிலர் முறைகேடாக பயன்படுத்தி வருவதாகவும், அவர்கள் நாளை (திங்கட்கிழமை)க்குள் அவற்றை சரி செய்து வைக்க வேண்டும் என்றும், தவறினால் ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் ஊராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments