புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வாகன எரிபொருள் விலையைக் கண்டித்தும், மதுபானக் கடைகளை மூடக் கோரியும், புதுக்கோட்டை தலைமை மருத்துவமனை மீண்டும் அதே இடத்தில் இயங்கக் கோரியும் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து வெளியேறும் மருத்துவ கழிவுகள் பாசன குளங்களில் கலப்பதை தடுத்திடக் கோரியும், இந்திய ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் மாவட்டம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஹிமாயுன் கபீர் மாநில ஒருங்கிணைப்பாளர் கண்டன உரையாற்றினார். 

ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொகுதி, நகர,ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments