கானாட்டில் சிறுமியை திருமணம் செய்த கொத்தனார் போக்சோவில் கைது!கானாட்டில் சிறுமியை திருமணம் செய்த கொத்தனார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

மணமேல்குடி தாலுகா காசாங்குடி கானாட்டை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 32). கொத்தனாரான இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். 

இந்நிலையில், மாரிமுத்து அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 2-வது திருமணம் செய்ததாக அறந்தாங்கி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments