மலேசியாவிலிருந்து முதன்முறையாக திருச்சிக்கு வந்த மலேசியா ஏர்லைன்ஸ் விமானம்!! (படங்கள்)வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசின் சார்பில் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி மஸ்கட், ஓமன், சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு இயக்கப்பட்ட விமானங்களில் சுமார் 2 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

இந்தநிலையில் மலேசியாவில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை அழைத்து செல்ல மலேசிய அரசின் சார்பில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த விமானம் மலேசியாவில் இருந்து புறப்பட்டு நேற்று காலை 9.05 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைத்தது. அதில் 148 பயணிகள் வந்தனர். பின்னர் 16 பயணிகளுடன் அந்த விமானம் காலை 9.45 மணிக்கு மலேசியா நோக்கி புறப்பட்டு சென்றது. திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் வந்து செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments