தினசரியாக்கப்படுமா கோவை-ராமேஸ்வரம் வாராந்திர ரயில் ? (புதுக்கோட்டை வழியாக)






தினசரியாக்கப்படுமா கோவை-ராமேஸ்வரம் வாராந்திர ரயில் ? (புதுக்கோட்டை வழியாக)

புதுக்கோட்டையிலிருந்து சென்னை க்கு தினசரி பல்லவன், Boatmail, சேது என மூன்று ரயில்களும், வாரம் மும்முறை இயங்கும் "சிலம்பு" ரயிலும், இவை தவிர புவனேஸ்வர் வாராந்திர ரயிலும் உள்ளது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான கோவைக்கு புதுக்கோட்டை வழியாக  கடந்த 2013 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 16617/18 கோவை- ராமேஸ்வரம்-கோவை  வாராந்திர ரயிலை தவிர தினசரி ரயில்கள் இல்லை. தொழில்வளம் நிறைந்த நகரங்களானா  கோவை, திருப்பூர், ஈரோடு , கரூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களை புதுக்கோட்டை, சிவகங்கை,ராமநாதபுரம் மாவட்டங்களுடன் இணைக்கும் ரயிலாக "கோவை-ராமேஸ்வரம்" ரயில் உள்ளது. கொங்கு பகுதியில் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களை சுற்றியுள்ள பல லட்சம் மக்கள் வேலை நிமித்தமாக தங்கி வேலை பார்த்துவருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் சொந்த ஊருக்கு வந்து செல்ல அரசு/தனியார் பேருந்துகளை நம்பி தான் உள்ளனர். கோவை-ராமேஸ்வரம் ரயில் வாரத்தில் ஒரு நாள் இயங்கினாலும் இந்த ரயிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

 இந்த ரயிலை தினசரியாக்கினால் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனடைவர்.  மேலும் முன்பு அறிவிக்கப்பட்டபடி பாலக்காடு டவுன்- திருச்சி விரைவு ரயிலை "புதுக்கோட்டை" வழியாக ராமேஸ்வரம் வரை நீடிக்கவேண்டும். இதன் மூலம் பகலிலும் கொங்கு பகுதிக்கு செல்ல ரயில் சேவை கிடைக்கும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments