அரிமளம் அருகே மக்களின் தேவையறிந்து பணியாற்றும் கடியாபட்டி ஊராட்சிமன்ற தலைவர்!அரிமளம் ஒன்றியம் கடியாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் மக்களின் தேவை அறிந்து பணியாற்றி வருகிறார்.

நம் மக்களை தொடர்ந்து  வாட்டிவரும்  கொரோனா தொற்றினால் பலர் வாழ்க்கையையே இழந்து வாடுவது நிதர்சனமான உண்மை. தமிழக அரசு இந்த பேரிடர் காலத்தில் போர்க்கால அடிப்படையில் பாதுகாப்பு  நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எனினும் ஊரகப் பகுதிகளில் மிகச்சிலரே மக்களின் தேவையறிந்து பணியாற்றி வருகிறார்கள். 

அவ்வகையில் பொதுமக்களுக்கு மிகச் சிறப்பாக சேவையாற்றி வருபவர் அரிமளம் ஒன்றியம் கடியாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஸ்வரி சோமசுந்தரம்.

முதுநிலை பட்டதாரியான இவர், கடந்த உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் கடியாபட்டி ஊராட்சிக்கு மக்களின் பேராதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.  மக்களின் குறையறிந்து மிகச் சிறப்பாக சேவை புரிந்து வரும் ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, கொரோனா பேரிடர் காலத்தில் வீதிகளை சுத்தப்படுத்தி,  கிருமி நாசினி தெளித்து ஊராட்சி பணியாளர்கள் மூலம் வீடுகள் தோறும் கபசுரக் குடிநீர் வழங்கினார். 

மேலும் பொதுமக்களிடம் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி மக்கள் அச்சப்படாத வகையில் அனைவரும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முறையாக செயல்படுத்தி வருகிறார்.

ஊரடங்கு காலத்தில் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு மக்களுக்கு தேவையான காய்கறிகள் கிடைக்கும் வகையில் வாரச்சந்தையை பகுதி வாரியாக பிரித்து மலிவு விலையில் காய்கறிகள் கிடைக்கும் படியும், அதேநேரம் வெளியில் வரும் மக்கள் கண்டிப்பாக முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தியும்  வருகிறார்.

தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்களை தேவையான, தகுதியான பயனாளர்களுக்கு கிடைக்கும்படி செய்து வருகிறார். பெருமழை நேரங்களில் மழை நீர் வீணாகாமல் சேமிக்கும் பொருட்டு வரத்துவாரிகள் அனைத்தும் ஜேசிபி  இயந்திரம் கொண்டு சுத்தம் செய்து, அனைத்து கண்மாய்களும் நிரம்பும்படி செய்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது சொந்த செலவில் கடியாபட்டி ஆரம்ப சுகாதார மையத்திற்கு மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளார். 

பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குளியல்தொட்டிகள், குடிநீர்குழாய் விரிவாக்கம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், சாலை வசதி, தெரு விளக்குகள் என ஊராட்சிக்குரிய தமிழக அரசின் திட்டங்களை முறையாக ஒன்றியத்திலிருந்து பெற்று மக்களின் நலத் திட்டங்களை  செயல்படுத்தி வருகிறார் ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரி.

இந்த ஊராட்சியை பொருத்தவரை தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவரின் அனைத்து மக்கள்நல  செயல்பாடுகளுக்கும் ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற துணைதலைவர், ஊராட்சி செயலர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற  பணியாளர்கள் உறுதுணையாக இருந்து வருகிறார்கள். மக்கள் பணியில் சிறப்பாக செயலாற்றி வரும் கடியாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஸ்வரியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments