இந்திய புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் மறைவு - அமெரிக்கா இரங்கல்



ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் புலிட்சர் விருது பெற்ற இந்திய புகைப்பட பத்திரிகையாளர் தனிஷ் சித்திக் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

மும்பையை சேர்ந்த இவர் ரேய்ட்டர்ஸ் என்னும் பத்திரிகை நிறுவனத்தில் மூத்த புகைப்பட பத்திரிகையாளராக பணியாற்றி வந்த நிலையில் நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தானின் கந்தகாரில் பாதுகாப்பு படையினருடன் சென்று தலீபான்கள் தாக்குதலை புகைப்படம் எடுத்து கொண்டிருந்தபோது கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் இந்திய பத்திரிகையாளர் தனிஷ் சித்திக் மறைவுக்கு அமெரிக்கா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் துணை செய்தி தொடர்பாளர் ஜலினா போர்ட்டர் கூறுகையில், “ஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் இடையிலான மோதலை புகைப்படம் எடுத்தபோது ரேய்ட்டர்ஸ் புகைப்பட பத்திரிகையாளர் தனிஷ் சித்திக் கொல்லப்பட்டார் என்பதை கேட்டு நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். சித்திக்கின் மரணம் ரேய்ட்டர்ஸ் மற்றும் அவரது ஊடக சகாக்களுக்கு மட்டுமல்ல, உலகின் பிற பகுதிகளுக்கும் மிகப்பெரிய இழப்பாகும். ஆப்கானிஸ்தானில் அதிகமான பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுக்கின்றோம்” என கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments