தினசரி புதுக்கோட்டையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு பயணிப்பவர்கள் கவனத்திற்கு

06126/25 காரைக்குடி⇋திருச்சிராப்பள்ளி DEMU(Unreserved) ரயிலை பயன்படுத்துவதால் என்ன நன்மை என்று பார்க்கலாம்.

1. 06126/காரைக்குடி-திருச்சி DEMU ரயில், புதுக்கோட்டையிலிருந்து காலை- 07:50 AM மணிக்கு புறப்பட்டு, திருச்சிராப்பள்ளிக்கு காலை- 09:05 AM மணிக்கு சென்றுவிடும்.

2. புதுக்கோட்டை-திருச்சிராப்பள்ளி கட்டணம்- ₹35/- திருச்சி-புதுக்கோட்டை பேருந்து கட்டணத்தை விட ₹15/- ரூபாய் குறைவு 

3. Unreserved என்பதால் உடனே டிக்கெட் எடுத்து பயணிக்கலாம்.

4. "மாதாந்திர சீசன் டிக்கெட்" வசதி உள்ளது.புதுக்கோட்டை⇋திருச்சிராப்பள்ளி இடையே மாதம் மாதம் முழுவதும் பயணிக்க கட்டணம் வெறும் ₹270/- மட்டுமே. (பேருந்தில் பயணிப்பதை காட்டிலும் 10 மடங்கு  பணத்தை மிச்சம் செய்யலாம்) 

5. பகலில் சென்னை செல்ல இந்த DEMU ரயிலின் மூலம்  தினசரி வைகை & சோழன் ரயில்களுக்கு இணைப்பு  கிடைக்கும்.

➥"வைகை"திருச்சியிலிருந்து புறப்படும் நேரம் 09:20 AM வழி அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம் , செங்கல்பட்டு , தாம்பரம் , சென்னை எழும்பூர்

➥"சோழன்" திருச்சியிலிருந்து புறப்படும் நேரம் 10:10 AM வழி தஞ்சாவூர்,மயிலாடுதுறை,விழுப்புரம் , செங்கல்பட்டு , தாம்பரம் , சென்னை எழும்பூர்

6. மீண்டும் 06125/திருச்சிராப்பள்ளி-காரைக்குடி DEMU மாலை 06:15PM  மணிக்கு புறப்பட்டு 07:08PM மணிக்கு புதுக்கோட்டை வந்துவிடும்.

தற்போதைய சூழலில் பயனுள்ள ரயில் என்பதால் பயன்படுத்திக்கொள்ளவும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments