கோபாலப்பட்டிணத்தில் கழிவு நீரை தெருவில் விடும் வீடுகளுக்கு நாட்டாணி புரசக்குடி ஊராட்சி மன்ற அறிக்கை ஒட்டப்பட்டது



நாட்டாணி புரசக்குடி ஊராட்சி மன்ற அறிக்கை வெளியிடுள்ளனர்.

அந்த அறிக்கையில் கூறியாதவது :
  1. கழிவு நீர் மற்றும் சாக்கடை நீர்களை தெருக்களில் விடுவது சட்டப்படி குற்றமாகும்.
  2. செப்டிக் டேங்க் அமைத்தல் தங்கள் வீட்டின் எல்லைக்குள் அமைத்துக் கொள்ள வேண்டும். தெருக்கள் மற்றும் அரசு போடப்பட்டுள்ள சாலைகள் இவைகளை சேதப்படுத்தி தெருக்களில் போடுவது சட்டபடி குற்றமாகும்.
  3. புதிதாக வீடு கட்டுபவர்கள் மற்றும் பழைய வீடுகளை சரி செய்யும் பட்சத்தில் தெருக்களை ஆக்கிரமிக்க கூடாது. முறையான ஊராட்சி மன்ற ஒப்புதல் பெற்ற பிறகே நீங்கள் கட்டிக் கொள்ளலாம்.
  4. குப்பைகளை தெருக்களில் போட்டு அசுத்தம் செய்வது சுகாதார கேடு உங்கள் குப்பைகளை குப்பை வண்டியில் ஒப்படைக்கவும்.
  5. இவை அனைத்தும் நீங்களே சரி செய்து கொள்ள கால அவகாசம் சரியாக 30 நாட்கள் மட்டுமே.
மேலே குறிப்பிட்டவைகளை மீறுபவர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்படுள்ளது.

மேலும் கோபாலப்பட்டிணத்தில் ஊராட்சி மன்ற 3-வது வார்டு உறுப்பினர் அபுதாஹீர் வீடு வீடாக முகப்பில் அறிக்கை நோட்டீஸ் ஒட்டினர். இதில் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி வருவாய் ஆய்வாளர் உடனிருந்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments