தொலைபேசி ஒட்டுகேட்பு: அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும்: தமீமுன் அன்சாரி பேட்டி!!



புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி செய்தியாளரிடம் பேசுகையில் பெகாசஸ் ஒட்டு கேட்ட விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்.

இதில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேச்சும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. எனவே உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து உரிய விசாரணை நடத்த வேண்டும். மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசு செயல் கண்டிக்கத்தக்கது. 

கொரோனா  இரண்டாவது அலையில் தமிழக அரசின் செயல்பாடு மிக சிறப்பாக உள்ளது  திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல்வரின் வேகம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பல் துறையில் அரசின் செய்யக் கூடிய மாற்றங்கள் அதிகாரிகளின் பணியிட மாற்றங்கள் ஆய்வுக் கூட்டங்கள் அவர்கள் செய்யக்கூடிய செயல் திட்டங்கள் ஆகியவை மிகவும் பாராட்டத்தக்கது எதிர்க்கட்சி தலைவர்களே பாராட்டக் கூடிய அளவிற்கு அரசின் செயல்பாடு உள்ளது.

திமுக அரசை கண்டித்து அதிமுக அறிவித்துள்ள போராட்டம் தேவையற்றது எதிர்க்கட்சி என்றாலே ஆளும் கட்சியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அவர்கள் ஆர்ப்பாட்டத்தை  நடத்துகின்றனர். அதிமுக மற்றும் சசிகலா இடையே நடக்கும் நிகழ்வுகள் அவர்கள் கட்சி விவகாரம் இருந்தாலும் பாரதிய ஜனதா கட்சி என்ன சொல்கிறதோ அதுதான் அதிமுகவில் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை திராவிட கட்சிகளை மட்டுமே மக்கள் ஆதரிப்பார்கள் பாஜகவை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்  மதவெறியைத் தூண்டக் கூடியவர்களும் ஒரு மதத்தை இழிவுபடுத்தி பேசுபவர்கள் யாராக எந்த மதமாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் சரிசமமாக எடுக்க வேண்டும்.

இது போன்று பேசுபவர்களை அந்த மதத்தைச் சேர்ந்தவர்களே  நிராகரிக்கின்றனர் குறிப்பாக இளைஞர்கள் இதனை விரும்பவில்ல . இது ஆரோக்கியமான மாற்றம். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளவற்றை படிப்படியாக நிறைவேற்றும் அவர்கள் பதவியேற்ற நாள் முதலே கொரோனாவை  கட்டுப்படுத்துவதில்தான்  தங்களுடைய கவனத்தை செலுத்திக் வருகின்றனர். 

நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணிக்கு எங்களுடைய ஆதரவை தெரிவித்தோம் அதே நிலைப்பாடு வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments