கோட்டைப்பட்டினத்தில் மோட்டார் சைக்கிள் கார் மீது மோதியதில் தொழிலாளி உயிரிழப்புகோட்டைப்பட்டினத்தில் மோட்டார் சைக்கிள் கார் மீது மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார்.

கோட்டைப்பட்டினம் மீனவர் காலனியை சேர்ந்தவர் அபூபக்கர் (வயது 45). இவர் வலை பின்னும் தொழில் செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் ஜெகதாப்பட்டினம் சென்றுவிட்டு மீண்டும் கோட்டைப்பட்டினம் நோக்கி வந்து கொண்டு இருந்தார். கோட்டைப்பட்டினம் கடைவீதியில் வந்தபோது முன்னே சென்ற கார் மீது எதிர்பாராத விதமாக மோதி கீழே விழுந்தார். 

இந்நிலையில் எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிளில் இருந்த விழுந்தவரின் தலையின் மீது ஏறி இறங்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். 

இதுகுறித்து கோட்டைப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments