புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கொரோனா விழிப்புணர்வு குறும்படம்-மீம்ஸ் போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு! கலெக்டர் தகவல்!!கொரோனா தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி தமிழக அரசால் பல்வேறு வழிகளில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது மாபெரும் கொரோனா விழிப்புணர்வு முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 7-ந் தேதி வரை ஒரு வார காலத்திற்கு தமிழகம் முழுவதும் நடத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு குறும்படம் எடுக்கும் போட்டியும், விழிப்புணர்வு மீம்ஸ் எழுதும் போட்டியும் நடத்தி சிறந்த படைப்புக்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தால் நற்சான்றுகளும் பரிசுகளும் வழங்கப்படவுள்ளது. 

எனவே ஆர்வமுள்ள பொதுமக்கள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு சிறந்த படைப்புகளை உருவாக்கி அதனை வருகிற 3-ந் தேதிக்குள் ddhspdkcovid@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, 93453 33899 என்ற வாட்ஸ்-அப் செல்போன் எண்ணிற்கோ அல்லது துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் 6, சாந்தநாதபுரம் 6 -ம் வீதி, புதுக்கோட்டை-622 001 என்ற அலுவலகத்திற்கு நேரடியாக அனுப்பி வைக்குமாறு கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments