கோபாலப்பட்டிணத்தில் துணை சுகாதார நிலையம் (SHC) அமைக்க அதிகாரிகள் ஆய்வு


கோபாலப்பட்டிணத்தில் துணை சுகாதார நிலையம் (SHC) அமைக்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணத்தில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருப்பதால் ஊருக்கு துணை சுகாதார நிலையம் (SHC)
Sub health center அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல வருடங்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இதையடுத்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு  துணை சுகாதார நிலையம் (SHC)
Sub health center அமைப்பதற்கு நாட்டானி புரசக்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் முகம்மது மீராசா அவர்கள் முயற்சியில் 2016-ஆம் ஆண்டு அன்றே இடத்தை அதிகாரிகள் தோ்வு செய்தனா். 
 
இந்நிலையில், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மூன்று நாட்களுக்கு முன்பு பெரிய பள்ளி அருகில் உள்ள இடத்தை கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன்,  மற்றும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் பாண்டித்துரை ஆகியோர் துணை சுகாதார நிலையம் (SHC) Sub health center அமைய உள்ள
இடத்தை ஆய்வு செய்தனர்.

கோபாலப்பட்டிணம் பொதுமக்கள் துணை சுகாதார நிலையம் வரும் என்று எதிர்பார்த்து உள்ளனர்.
எனவே இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments