அறந்தாங்கி அருகே செட்டிக்காடு கிராமத்தில் மாணவர்கள் சேர்க்கையை வலியுறுத்தி அப்துல்கலாம் வேடம் அணிந்து விழிப்புணர்வு!!அறந்தாங்கி அருகே செட்டிக்காடு கிராமத்தில் மாணவர்கள் சேர்க்கையை வலியுறுத்தி அப்துல்கலாம் வேடம் அணிந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அறந்தாங்கி அருகே செட்டிக்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கல்வித்தொலைக்காட்சி ஒளிபரப்பு அட்டவணை வழங்குதல் மற்றும் மாணவர்கள் சேர்க்கை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியர் லீமாரோஸ்லிண்ட் தலைமை தாங்கினார். மாணவர்கள் சேர்க்கையை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவயோகம் தொடங்கி வைத்தார். மேலும் இந்த பள்ளி தலைமை ஆசிரியர், அப்துல்கலாம் வேடம் அணிந்து ஆசிரியர்களுடன் வீடு, வீடாக சென்று மாணவர் சேர்க்கையை வலியுறுத்தினார். 

மேலும் அரசு பள்ளியில் வழங்கப்படும் கல்வி மற்றும் விலையில்லா பொருட்கள் குறித்து எடுத்து கூறினார். இதில் ஆசிரியர் பயிற்றுனர் சசிக்குமார், ஆசிரியர் பாலச்சந்திரன் மற்றும் பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments