கட்டுமாவடி கடற்கரை பகுதியில் நண்டு கழிவுகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு: மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு!!மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் அதன் தலைவர் பரணி கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

துணை தலைவர் சீனியார், ஆணையர் அரசமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசும்போது, கட்டுமாவடி கடற்கரை பகுதியில் உள்ள நண்டு கம்பெனிகளின் கழிவுகளால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். இதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். காந்திநகர், கீழக்குடியிருப்பு சாலைகளை சீரமைக்க வேண்டும். மணமேல்குடி அய்யனார் கோவில் அருகில் புயல் பாதுகாப்பு கட்டிடம் பழுதடைந்த நிலையில் விழும் நிலையில் உள்ளது. வேறு கட்டிடம் கட்ட வேண்டும்.

மணமேல்குடி கடைவீதியில் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான இடம் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. உடனே அந்த இடத்தில் ஊராட்சி ஒன்றியத்திற்கு வருவாய் வருவதுபோல் கட்டிடம் கட்டி வாடகைக்கு விடவேண்டும் என்றனர். இதற்கு பதில் அளித்து ஆணையர், தலைவர் பேசும்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 

கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி தமிழ்செல்வன் மற்றும் அனைத்து கவுன்சிலர்கள், அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments