ஆவுடையார்கோவிலில் கொரோனா 3-வது அலையை தடுப்பது குறித்து விழிப்புணர்வு முகாம்!கொரோனா 3-வது அலையை தடுக்கும் பொருட்டு ஆவுடையார்கோவிலில் உள்ள தனியார் மண்டபத்தில் அறந்தாங்கி கோட்டாட்சியர் சொர்ணராஜ் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இதில், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் உமாதேவி, அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலா முத்து, வளர்ச்சி அலுவலர்கள் அரசமணி, பெரியசாமி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வருவாய்த்துறை அலுவலர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் கோட்டாட்சியர் பேசும்போது, ஆவுடையார்கோவில் பகுதியில் 40 சதவீதத்திற்கு மேல் பொதுமக்களுக்கு கொேரானா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும், அதை 100 சதவீதமாக்க வேண்டும் என்று கூறினார். முடிவில் ஆவுடையார்கோவில் தாசில்தார் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments