புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸ்காரர்கள் பணியிட மாற்றம் அதிரடி உத்தரவு.
புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதில் 27 சப்-இன்ஸ்பெக்டர்கள், 9 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கள் பணியாற்றிய இடங்களில் இருந்து மாவட்டத்திற்குள் வேறு போலீஸ் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இதேபோல போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீஸ்காரர்கள், ஏட்டுகள் உள்பட 20 பேரை மாட்டத்திற்குள் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். மேலும், புதுக்கோட்டை, ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலையங்களில் பணியாற்றிய போலீஸ்காரர்கள் மற்றும் ஏட்டுகள் 25 பேரை மாவட்டத்திற்குள் உள்ள வேறு போலீஸ் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை போலீஸ் சூப்பிரண்டு நேற்று பிறப்பித்துள்ளார். இந்த பணியிட மாற்றம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments